வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானம்

ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள குறைப்பாடுகள் உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பொறியியலாளர்கள் சங்கம் தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், சுகயீன விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் மேலதிக பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.