கோழி இறைச்சி, முட்டை விலைகளில் மாற்றம்

Mullinews WhatsApp Group on WhatsApp
கோழி இறைச்சி, முட்டை விலைகளில் மாற்றம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் மேலும் குறையும் சாத்தியம் காணப்படுவதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 மேலும், வட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்நிலை மாறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 சிறு மற்றும் நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்பிவருகின்றார்கள்.

 இதனால், முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW