அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் - அமைச்சர் நளின்

Mullinews WhatsApp Group on WhatsApp



அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

 ஜா எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. 

 எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும். 

 அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். 

இந்தநிலையில் நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.






செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW